03 மூன்று அடிப்படைகள் (நான்கு விடயங்கள்: அறிவு, அதன்படி செயல்படுதல், அதன்பால் அழைத்தல், அதில் ஏற்படும் துன்பங்களைப் பொறுத்தல்)
بسم الله الرحمن الرحيم
(பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.) முதலாவது: நான்கு விடயங்கள்
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! நாம் நான்கு விடயங்களைக் கற்பது கட்டாயம் என்பதை அறிந்துகொள்ளுங்கள். முதலாவது: அறிவு. அது ஆதாரங்களுடன் அல்லாஹ்வையும் அவனது நபியையும் ﷺ இஸ்லாமிய மார்க்கத்தையும் பற்றி அறிதலாகும்.
இரண்டாவது: அதன்படி செயல்படுதல்.
- அல்லாஹ்வின் வேதத்தையும் நபிமார்களையும் பின்பற்றுவதற்காக
- தமக்கு முந்திய அறிஞர்களையும் ஸலஃப்களையும் முன்மாதிரியாகக் கொள்வதற்காக; தங்கள் நூல்களை பிஸ்மில்லாஹ் என்று தொடங்குவது அவர்களின் வழக்கமாக இருந்தது.
- கண்ணியமிக்க அல்லாஹ்வின் பெயரால் பரக்கத் பெறுவதற்காக.
2)) முன்னுரையில் குறிப்பிட்டதுபோல, கல்வி கற்பவர்களுக்காக துஆ செய்து, அவர்களுக்கு அல்லாஹ்விடம் அருளை வேண்டித் தொடங்குவது ஆசிரியரின் வழக்கமாகும். இது பின்வருவனவற்றிற்கு ஆதாரமாக உள்ளது:
- அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தின் அறிஞர்கள் தமது மாணவர்களிடம் இரக்கம் கொண்டிருப்பது.
- இஸ்லாமிய மார்க்கம் அடிப்படையிலேயே அருளையும் இரக்கத்தையும் அடித்தளமாகக் கொண்டிருப்பது.
அறிவு என்பது உண்மையை அதன் ஆதாரத்துடன் அறிதல். அதன் எதிர்ப்பதம் அறியாமை.
இரண்டாவது: அதன்படி செயல்படுதல்
அறிவிற்கும் செயலுக்கும் உள்ள தொடர்பை விளக்கும்போது கூறப்பட்டது: அறிவு செயலை அழைக்கிறது; செயல் பதிலளித்தால் அது நிலைத்திருக்கும்; இல்லையெனில் அறிவு விலகிச் சென்றுவிடும். எனவே செயலுடன் இணைந்திராத அறிவில் பயனில்லை. ஒருவர் கற்றால் அதன்படி செயல்படுவது அவருக்குக் கட்டாயம். இல்லையெனில் அவரிடம் யூதர்களைப் போன்ற தன்மை இருக்கும். ஏனெனில் யூதர்களிடம் அறிவு உள்ளது; செயலில்லை.
"يَعۡرِفُونَهُۥ كَمَا يَعۡرِفُونَ أَبۡنَآءَهُمۡۖ وَإِنَّ فَرِيقٗا مِّنۡهُمۡ لَيَكۡتُمُونَ ٱلۡحَقَّ وَهُمۡ يَعۡلَمُونَ "
(பொருள்: தங்கள் பிள்ளைகளை அறிந்திருப்பதுபோல அவரை அறிந்திருக்கிறார்கள். அவர்களில் ஒரு பிரிவினர் அறிந்துகொண்டே உண்மையை மறைக்கிறார்கள். 146)
நரக நெருப்பு முதலில் மூவரைக் கொண்டு மூட்டப்படும்; அவர்களில் ஒருவர் அறிவைக் கற்று அதன்படி செயல்படாத அறிஞர்.
தனது அறிவின்படி செயல்படாத அறிஞர் சிலை வணங்குவோருக்கு முன்பே தண்டிக்கப்படுவார்.
மூன்றாவது: அதன்பால் அழைத்தல்.
மார்க்கத்தின் பால் அழைப்பதற்கு நிபந்தனைகளும் விதிமுறைகளும் உள்ளன. அவற்றின் அடிப்படையில் அது அமைய வேண்டும். அவற்றில் முக்கியமானவை:
- அழைப்பானது அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் நாடியதாக இருக்க வேண்டும்.
- அழைப்பானது ஷரீஅத் அறிவின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்.
- அழைப்பானது ஞானத்துடனும் பொறுமையுடனும் இருக்க வேண்டும்.
- அழைக்கப்படுவோரின் நிலைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த நிபந்தனைகளுக்கான ஆதாரம்:
உயர்ந்தோன் அல்லாஹ்வின் கூற்று:
قُلْ هَٰذِهِۦ سَبِيلِىٓ أَدْعُوٓاْ إِلَى ٱللَّهِ ۚ عَلَىٰ بَصِيرَةٍ أَنَا۠ وَمَنِ ٱتَّبَعَنِى ۖ وَسُبْحَٰنَ ٱللَّهِ وَمَآ أَنَا۠ مِنَ ٱلْمُشْرِكِينَ
(பொருள்: கூறுவீராக: இதுவே எனது பாதை. நானும் என்னைப் பின்பற்றுவோரும் தெளிவான அறிவின் அடிப்படையில் அல்லாஹ்வின்பால் அழைக்கிறோம். அல்லாஹ் தூயவன். நான் இணைவைப்போரில் ஒருவன் அல்லன்.)
ஆசிரியர் இவ்வாறு கூறுவதுபோல் உள்ளது: நீங்கள் (ஒரு விடயத்தை)(ஒரு விடயத்தை) கற்று, பின்னர் அதன்படி செயற்பட்டால், நபி ﷺ, ஸஹாபாக்கள் மற்றும் முன்னோர்களான நல்லோர்கள் சென்ற வழியில் செல்ல வேண்டும். ஏனெனில் அல்லாஹ் கூறினான்:
قُلْ هَٰذِهِۦ سَبِيلِىٓ أَدْعُوٓاْ إِلَى ٱللَّهِ ۚ عَلَىٰ بَصِيرَةٍ أَنَا۠ وَمَنِ ٱتَّبَعَنِى ۖ وَسُبْحَٰنَ ٱللَّهِ وَمَآ أَنَا۠ مِنَ ٱلْمُشْرِكِينَ
(பொருள்: கூறுவீராக: இதுவே எனது பாதை. நானும் என்னைப் பின்பற்றுவோரும் தெளிவான அறிவின் அடிப்படையில் அல்லாஹ்வின்பால் அழைக்கிறோம். அல்லாஹ் தூயவன். நான் இணைவைப்போரில் ஒருவன் அல்லன்.)
எனவே மார்க்க அழைப்பு அவசியமாகும்.
நான்காவது: அதில் ஏற்படும் துன்பங்களைப் பொறுத்தல்.
இதற்கான ஆதாரம் அல்லாஹ் கூறுகிறான்:
(وَالْعَصْرِ (1) إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ (2) إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ (3))
(பொருள்: காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நிச்சயமாக நஷ்டத்தில் இருக்கிறான். ஈமான் கொண்டு நல்லமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்பவர்களைத் தவிர)
இமாம் இப்னுல் கய்யிம் —றஹிமஹுல்லாஹ்— அவர்கள் பொறுமையை மூன்று வகைகளாகப் வகைப்படுத்தினர்:
- அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதில் அதனை நிறைவேற்றும் வரை பொறுமை கொள்ளல்.
- அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதில் அதனை தவிர்ந்து கொண்டு பொறுமையாக இருத்தல்
- அல்லாஹ் விதித்த வேதனையான விதிகளில் (கழாகத்ரில்) பொறுமை காத்தல்
நான்கு விடயங்களைக் குறிப்பிட்ட பின், ஆசிரியர் அவற்றிற்கான ஆதாரத்தை அலகுர்ஆனிலிருந்து முன்வைத்தார்; அதுதான் ஸூரத்துல் அஸ்ர்.
நூலாசிரியர் எப்போதும் விடயத்தை ஏன் ஆதாரத்துடன் சேர்த்துக் குறிப்பிடுகிறார்?
- மாற்றுக் கருத்துடையவருக்குப் பதிலளிக்க மாணவரிடம் தெளிவான ஆதாரம் இருக்க வேண்டும் என்பதற்காக
- கண்மூடித்தனமாகப் பின்பற்றாமல், ஆதாரத்தைப் பின்பற்ற மாணவரைப் பயிற்றுவிப்பதற்காக
- சரியான அடிப்படைகளில் ஆதாரங்களிலிருந்து சட்டங்களைப் பெறும் திறன் மாணவருக்கு இருக்க வேண்டும் என்பதற்காக
ஷாஃபிஈ கூறினார்: அல்லாஹ் தனது படைப்புகளுக்கு ஆதாரமாக இந்த ஸூராவைத் தவிர வேறெதையும் இறக்கியிருக்காவிட்டாலும், இதுவே அவர்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கும் (1).
இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பாடம்: சொல் மற்றும் செயலுக்கு முன் அறிவு.