English flag
English
Select a Language
English flag
English
العربية flag
العربية
Deutsch flag
Deutsch
فارسی flag
فارسی
Français flag
Français
Bahasa Indonesia flag
Bahasa Indonesia
Italiano flag
Italiano
Kurdî / کوردی flag
Kurdî / کوردی
Latviešu flag
Latviešu
नेपाली flag
नेपाली
Русский flag
Русский
தமிழ் flag
தமிழ்
Türkçe flag
Türkçe
Українська flag
Українська
اردو flag
اردو
English icon English
  • English icon English
  • العربية icon العربية
  • Deutsch icon Deutsch
  • فارسی icon فارسی
  • Français icon Français
  • Bahasa Indonesia icon Bahasa Indonesia
  • Italiano icon Italiano
  • Kurdî / کوردی icon Kurdî / کوردی
  • Latviešu icon Latviešu
  • नेपाली icon नेपाली
  • Русский icon Русский
  • தமிழ் icon தமிழ்
  • Türkçe icon Türkçe
  • Українська icon Українська
  • اردو icon اردو
மூன்று அடிப்படைகளையும் அவற்றின் ஆதாரங்களையும் விளக்கும் பாடநெறி: கப்ரில் கேட்கப்படும் மூன்று கேள்விகள்

07 மூன்று அடிப்படைகள் (துஆ, அறுத்துப் பலியிடுதல், நேர்ச்சை, அச்சம், தவக்குல் ஆகியவற்றின் வகைகள்...)

Study Duration
10 Min

அல்லாஹ் ஏவிய வணக்க வழிபாடுகளின் வகைகளான: இஸ்லாம், ஈமான் (இறைநம்பிக்கை), இஹ்ஸான் (அல்லாஹ்வைப்பார்ப்பது போல் வணங்குதல்); மேலும் துஆ (பிரார்த்தனை), கவ்ஃப் (அச்சம்), ரஜாஃ (ஆதரவு வைத்தல்), தவக்குல் (பாரமேட்டுதல்/நம்பிக்கை வைத்தல்), ரக்பா (ஆவல் கொள்ளல்), ரஹ்பா (பயப்படுதல்), குஷூஃ (பணிவு), கஷ்யா (நடுங்குதல்/அஞ்சுதல்), இனாபா (மீளுதல்), இஸ்திஆனா (உதவி தேடுதல்), இஸ்திஆதா (பாதுகாப்புத் தேடுதல்), இஸ்திகாஸா (இரட்சிக்கப் பிரார்த்தித்தல்), தபஹ் (அறுத்துப்பலியிடுதல்), நத்ர் (நேர்ச்சை செய்தல்) மற்றும் அல்லாஹ் கட்டளையிட்டுள்ள இவை அல்லாத இதர வணக்க வழிபாடுகள் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரியதாகும்.

இதற்கான சான்று அல்லாஹ் தஆலாவின் இந்த வசனமாகும்:

"நிச்சயமாக மஸ்ஜித்கள் (வணக்கத்தலங்கள்) அல்லாஹ்வுக்கே உரியன. எனவே, அல்லாஹ்வுடன் சேர்த்து வேறு எவரையும் நீங்கள் அழைக்காதீர்கள் (பிரார்த்திக்காதீர்கள்)." (சூரா அல்-ஜின்: 18).

எனவே, இவற்றில் ஏதேனும் ஒன்றை அல்லாஹ் அல்லாத வேறு எவருக்கும் அர்ப்பணிப்பவர், அவர் இணைவைப்பாளராகவும் (முஷ்ரிக்) இறைநிராகரிப்பாளராகவும் (காஃபிர்) ஆகிவிடுவார். இதற்கான சான்று அல்லாஹ் தஆலாவின் இந்த வசனமாகும்:

"எவர் அல்லாஹ்வுடன் வேறு ஒரு தெய்வத்தையும் அழைக்கிறாரோ — அதற்கோ அவரிடம் எவ்வித ஆதாரமும் இல்லை — அவனது கணக்கு அவனது இறைவனிடமே உள்ளது. நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் வெற்றி பெறமாட்டார்கள்." (சூரா அல்-முஃமினூன்: 117).

ஹதீஸில் வந்துள்ளது: "பிரார்த்தனை (துஆ) என்பது வணக்கத்தின் மூளையாகும்." (இதன் பலவீனம் கீழே விளக்கப்பட்டுள்ளது). இதற்கான சான்று அல்லாஹ் தஆலாவின் இந்த வசனமாகும்:

"உங்கள் இறைவன் கூறுகிறான்: 'என்னையே நீங்கள் அழையுங்கள் (பிரார்த்தியுங்கள்); நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன். நிச்சயமாக எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்பவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகில் நுழைவார்கள்'." (சூரா காஃபிர்: 60).


நூலாசிரியரின் (முசன்னிஃப்) விளக்கக் குறிப்புகள்:

இப்னு கதீர் (ரஹ்) அவர்களின் கூற்றைத் தொடர்ந்து, ஆசிரியர் பல உள்ளம் சார்ந்த (قلبية) மற்றும் உடல் சார்ந்த (بدنية) வணக்க வழிபாடுகளைக் குர்ஆன் சான்றுகளுடன் பின்வருமாறு வரிசைப்படுத்துகிறார்:

1. துஆ (பிரார்த்தனை) இரண்டு வகைப்படும்:

துஆவுல் இபாதா (வணக்கப் பிரார்த்தனை): இது ஒரு மனிதனின் செயலால் செய்யும் பிரார்த்தனையாகும்; தொழுகை, நோன்பு, ஹஜ் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். "இதை அல்லாஹ் அல்லாதவரின் பக்கம் திருப்புவது பெரிய இணைவைப்பாகும் (ஷிர்க் அக்பர்)."

துஆவுல் மஸ்அலா (தேவைக் கோரிக்கை பிரார்த்தனை): இது நாவினால் வார்த்தைகளைக் கொண்டு கேட்கும் பிரார்த்தனையாகும்; "என்னை மன்னித்தருள்வாயாக, என் மீது கருணை காட்டுவாயாக" என்று கூறுவது போல். "இதன் சட்டத்தில் விரிவான விளக்கம் உள்ளது, இது இரண்டு வகைப்படும்."

துஆவுல் மஸ்அலா (தேவைக் கோரிக்கை)-வின் இரு வகைகள்:

1. அல்லாஹ்வைத் தவிர வேறு எவராலும் செய்ய முடியாத விஷயங்கள்: இதில் அல்லாஹ் அல்லாதவரிடம் வேண்டுவது "பெரிய இணைவைப்பாகும் (ஷிர்க் அக்பர்)."

2. படைப்புகளால் (மனிதர்களால்) செய்ய முடிந்த விஷயங்கள்: இது பின்வரும் 4 நிபந்தனைகளுடன் கூடும் (அனுமதிக்கப்படும்):

• அழைக்கப்படுபவர் உயிருடன் (حيًّا) இருக்க வேண்டும். (இறந்தவர்கள் இதில் விலக்கப்படுகிறார்கள்).

• அழைக்கப்படுபவர் அருகில்/நேரில் (حاضرًا) இருக்க வேண்டும். (மறைவாக, தொலைவில் இருப்பவர்கள் இதில் விலக்கப்படுகிறார்கள்).

• அழைக்கப்படுபவர் ஆற்றல் பெற்றவராக (قادرًا) இருக்க வேண்டும். (இயலாதவர்கள் இதில் விலக்கப்படுகிறார்கள்).

• அழைக்கப்படுபவர் வெறும் ஒரு காரணம் (سبب) மட்டுமே தவிர, அவராகவே எதையும் மாற்றிவிடும் சுய ஆற்றல் கொண்டவரல்ல என்று நம்ப வேண்டும்.

• குறிப்பு: அழைக்கப்படும் இந்த மனிதருக்கு இப்பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு மறைவான ஆற்றல் (تصرُّف خفي) இருக்கிறது என்றும், நன்மைகளைக் கொண்டுவரவும் தீமைகளைத் தடுக்கவும் அவரால் முடியும் என்றும் நம்பினால், அது ஷிர்க் (இணைவைப்பு) ஆகிவிடும்.

முக்கியக் குறிப்பு:

* நாம் ஒரு 'செயலின் மீதே' தீர்ப்பு வழங்குகிறோம் (உதாரணமாக: இந்தச் செயல் ஷிர்க் என்று கூறுவது). ஆனால் அந்தச் செயலைச் செய்த 'நபர் மீது' தீர்ப்பு வழங்குவதற்கு (அவர் முஷ்ரிக் அல்லது காஃபிர் என்று முத்திரை குத்துவதற்கு) ஆதாரங்கள் நிலைநாட்டப்பட வேண்டும் (إقامة الحجة) மற்றும் அவரது சந்தேகங்கள்/தெளிவற்ற நிலைகள் நீக்கப்பட வேண்டும் (انتفاء الشبهة).

* ஒரு நபர் முஃமினா அல்லது காஃபிரா என்று தீர்ப்பு வழங்கும் தகுதி மார்க்க அறிஞர்களுக்கு (உலமாக்களுக்கு) மட்டுமே உண்டு.

"பிரார்த்தனை வணக்கத்தின் மூளையாகும்" என்ற ஹதீஸ் பலவீனமானது (ழயீஃப்). நபியவர்களின் சரியான (ஸஹீஹான) பொன்மொழி: "பிரார்த்தனையே வணக்கமாகும்" என்பதாகும்.

பிரார்த்தனை எவ்வாறு வணக்கமாக அமையும்?

மேற்கூறிய வசனமே இதற்குச் சான்றாகும்: "உங்களுடைய இறைவன் என்னிடம் அழைத்துப் பிரார்த்தனை செய்யுங்கள் நான் உங்களுக்கு பதிலளிப்பேன் என்று கூறுகிறான். நிச்சயமாக எனது வணக்கத்தை (عبادتي) விட்டும் பெருமையடிப்பவர்கள் கேவலப்பட்டவர்களாக நரகில் நுழைவார்கள் (60)" என்று அல்லாஹ் கூறுகிறான். இங்கு பிரார்த்தனை என்று ஆரம்பித்துவிட்டு, அதை 'எனது வணக்கம்' என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளதால், பிரார்த்தனையே வணக்கம் என்பதற்கு இது சான்றாகும்.

2. கவ்ஃப் (அச்சம்):

அச்சம் என்பது அழிவு, தீங்கு அல்லது துன்பம் ஏற்படும் என்று எதிர்பார்ப்பதால் உள்ளத்தில் ஏற்படும் ஒருவித பதற்றமாகும்.

அல்லாஹ், ஷைத்தானின் உற்ற தோழர்களுக்கு அஞ்சுவதைத் தடுத்து, தனக்கு மட்டுமே அஞ்சுமாறு கட்டளையிட்டுள்ளான்.

அச்சம் (கவ்ஃப்) மூன்று வகைப்படும்:

1. வணக்கம், கண்ணியம் மற்றும் மறைவான அச்சம் (خوف عبادة وتعظيم وسر):

இது ஒரு வணக்கசாலி, தான் வணங்கும் இறைவனுக்குக் காட்டும் அச்சமாகும். இதில் பணிவும், கீழ்ப்படிதலும், மகத்துவப்படுத்துதலும் அடங்கும். இந்த வகை அச்சம் அல்லாஹ்வுக்கு மட்டுமே واجب (கடமை) ஆகும். இதை அல்லாஹ் அல்லாதவருக்கு அர்ப்பணிப்பது பெரிய இணைவைப்பாகும் (ஷிர்க் அக்பர்).

2. இயற்கையான அச்சம் (الخوف الطبيعي):

மனிதன் நெருப்பு, எதிரி, கொடிய விலங்குகள் போன்றவற்றுக்கு அஞ்சுவது போல். இது அனுமதிக்கப்பட்டது (முபாஹ்).

3. விலக்கப்பட்ட அச்சம் (الخوف المحرم):

அல்லாஹ்வின் ரஹ்மத்தை (அருளை) விட்டும் நிராசையடைவது அல்லது படைப்பினங்களுக்குக் கீழ்ப்படிவதற்காகப் படைத்தவனுக்கு மாறுசெய்வது போல் அஞ்சுவது.


3. ரஜாஃ (ஆதரவு வைத்தல்):

எளிதில் கிடைக்கக்கூடிய அல்லது தூரத்தில் இருக்கும் ஒரு நல்ல விஷயத்தை நெருக்கமாகக் கருதி, அதை மனிதன் பேராசையோடு எதிர்பார்ப்பதாகும்.

பணிவோடும் அடக்கத்தோடும் வைக்கப்படும் ஆதரவு (ரஜாஃ) அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியதாகும். அதை அல்லாஹ் அல்லாதவரிடம் வைப்பது பெரிய இணைவைப்பாகும் (ஷிர்க் அக்பர்).

புகழத்தக்க ஆதரவு என்பது, அல்லாஹ்வின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அதன் நற்கூலியை எதிர்பார்ப்பவர் அல்லது பாவத்திலிருந்து தவ்பா செய்து அதன் ஏற்பை எதிர்பார்ப்பவரிடம் மட்டுமே இருக்கும். எந்தச் செயலும் இல்லாமல் சும்மா ஆதரவு வைப்பது என்பது ஏமாற்றமும், கண்டிக்கத்தக்க வீண் ஆசையுமாகும்.

4. தவக்குல் (பொறுப்புச்சாட்டல்):

சான்று: "நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வின் மீதே தவக்குல் வையுங்கள்." (சூரா அல்-மாயிதா: 23).

மேலும்: "எவர் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைக்கிறாரோ, அவருக்கு அவனே போதுமானவன்." (சூரா அத்-தலாக்: 3).

ரக்பா (ஆவல்), ரஹ்பா (பயம்), குஷூஃ (பணிவு) இற்கான ஆதாரம்

"நிச்சயமாக அவர்கள் நற்செயல்களில் விரைந்து செயல்படுபவர்களாகவும், நம்மை ஆவலோடும் (ரக்பா) பயத்தோடும் (ரஹ்பா) அழைப்பவர்களாகவும் இருந்தனர்; மேலும் அவர்கள் நமக்கு அடங்கி நடப்பவர்களாக (குஷூஃ உடையவர்களாக) இருந்தனர்." (சூரா அல்-அன்பியா: 90).

தவக்குலின் (பொறுப்புச்சாட்டல்) வரைவிலக்கணம்

* மொழிரீதியான விளக்கம்: ஒரு பொருளின் மீது சாய்வது அல்லது அதைச் சார்ந்து இருப்பது.

* மார்க்க ரீதியான விளக்கம்: உள்ளப்பூர்வமாக அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்து, அவனைச் சார்ந்து இருப்பதோடு, அனுமதிக்கப்பட்ட காரணங்களை (முயற்சிகளை) மேற்கொள்வதாகும்.

தவக்குலில் மூன்று விஷயங்கள் நிறைவடைய வேண்டும்:

1. அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா மீது உள்ளப்பூர்வமாகச் சார்ந்து இருத்தல்.

2. அல்லாஹ் தன் வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவான் என்ற முழு நம்பிக்கை (தீன்).

3. மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரணங்களை (முயற்சிகளை/வழிமுறைகளை) கையாளுதல்.

* ரக்பா: விரும்பத்தக்க ஒரு பொருளை அடைய வேண்டும் என்ற பேரன்பு.

* ரஹ்பா: பயத்தின் காரணமாக அந்தப் பயமுறுத்தும் காரியத்தை விட்டும் ஓடித் தப்பிக்கும் அளவுக்குச் செயலுடன் கூடிய பயம்.

* குஷூஃ: அல்லாஹ்வின் மகத்துவத்திற்கு முன்னால் உள்ளமும் உடலும் தாழ்ந்து, அவனது பிரபஞ்ச மற்றும் மார்க்க விதிகளுக்கு முற்றிலும் கட்டப்படுவது

அல்லாஹ்வை நோக்கிப் பயணிக்கும் ஒரு முஃமின் (இறைநம்பிக்கையாளர்) அச்சத்தையும் (خوف - Khauf) எதிர்பார்ப்பையும் (رجاء - Rajaa) தன்னுள் ஒருசேரக் கொண்டிருக்க வேண்டும். ஒன்றையொன்று மிகைத்துவிடக் கூடாது; அவ்வாறு மிகைத்தால் அவர் வீழ்ந்து அழிந்துவிடுவார். எனவே, ஒரு பறவையின் இரு இறக்கைகளைப் போல அவரிடம் அச்சமும் எதிர்பார்ப்பும் இருக்க வேண்டும்.

6. கஷ்யா (அஞ்சுதல்/நடுங்குதல்) இற்கான ஆதாரம்:

"எனவே, நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்." (சூரா அல்-பகரா: 150).

7. இனாபா (மீளுதல்) இற்கான ஆதாரம்:

"நீங்கள் உங்கள் இறைவனின் பக்கம் மீளுங்கள்; அவனுக்கு முற்றிலும் பணியுங்கள்." (சூரா அஸ்-ஜுமர்: 54).

*இஸ்திஆனா (உதவி தேடுதல்) இற்கான ஆதாரம்: 

"உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்." (சூரா அல்-ஃபாத்திஹா: 5).

ஹதீஸிலும்  "நீ உதவி தேடினால் அல்லாஹ்விடம் உதவி தேடு." என வந்துள்ளது:

* இஸ்திஆதா (பாதுகாப்புத் தேடுதல்)  இற்கான ஆதாரம்:

"அதிகாலையின் இறைவனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக" (சூரா அல்-ஃபலக்: 1) மற்றும் "மனிதர்களின் இறைவனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக" (சூரா அன்-நாஸ்: 1).

* இஸ்திகாஸா (இரட்சிக்கப் பிரார்த்தித்தல் - கடுமையான துன்பம் மற்றும் அழிவிலிருந்து மீட்குமாறு அவசர உதவி கோருதல்.)  இற்கான ஆதாரம்: 

"நீங்கள் உங்கள் இறைவனிடம் இரட்சிப்புத் தேடியபோது, அவன் உங்களுக்குப் பதிலளித்தான்." (சூரா அல்-அன்ஃபால்: 9).

9. தபஹ் (அறுத்துப் பலியிடுதல்) இற்கான ஆதாரம்:

"(நபியே!) நீர் கூறுவீராக: நிச்சயமாக எனது தொழுகையும், எனது குர்பானியும் (அறுத்துப் பலியிடுதலும்), எனது வாழ்வும், எனது மரணமும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன. அவனுக்கு இணையாக எவருமில்லை." (சூரா அல்-அன்ஆம்: 162-163).

சுன்னாவிலிருந்து ஆதாரம்: "அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்துப் பலியிடுபவனை அல்லாஹ் சாபமிடுகிறான்."


அச்சம் (அல்-கஷ்யா): இது அஞ்சப்படுபவரின் மகத்துவத்தையும் அவரது முழுமையான அதிகாரத்தையும் அறிந்துகொள்வதன் மூலம் ஏற்படும் பயமாகும்.

மீளுதல் (அல்-இனாபா): அல்லாஹ்விற்கு கீழ்ப்படிந்து, அவனது கட்டளைகளுக்கு மாறு செய்வதைத் தவிர்ப்பதன் மூலம் அவனளவிலே திரும்புவதாகும்.

"நீங்கள் திரும்புங்கள் "உங்கள் இறைவன்பால், இன்னும் அவனுக்கு முற்றிலும் கட்டுப்படுங்கள்." அதாவது, உங்களது விவகாரங்களை அல்லாஹ்விடம் ஒப்படைப்பதாகும். ஏனெனில் நீங்கள் ஒரு அடிமை, அடிமையானவர் எஜமானுக்குக் கட்டுப்படுவது அவசியமாகும். அந்த எஜமான் அல்லாஹ்வே ஆவான்; நபி ﷺ அவர்கள் கூறியது போல: "அல்லாஹ்வே உண்மையான எஜமான் (அதிபதி) ஆவான்."

(3) உதவி தேடுதல் (அல்-இஸ்திஆனா):

துணையை நாடுதல்.

"உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்." இந்த வசனத்தில், இலக்கண முறைப்படி பின்னால் வரவேண்டியது முன்னால் கொண்டுவரப்பட்டுள்ளது; இது 'பிரத்தியேகப்படுத்துதலை' (Hasr) குறிக்கிறது. அதாவது: "உன்னைத் தவிர வேறு எவரையும் நாங்கள் வணங்க மாட்டோம், உன்னைத் தவிர வேறு எவரிடமும் நாங்கள் உதவி தேட மாட்டோம்."

பாதுகாப்புத் தேடுதல் (அல்-இஸ்திஆதா): அரவணைப்பை நாடுதல். அதாவது: தீங்கானவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுதல்.  "நான் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்றால் நான் அல்லாஹ்விடம் ஒதுங்குகிறேன், அவனைப் பற்றிக்கொள்கிறேன் என்று பொருள்.

இரட்சிப்புத் தேடுதல் (அல்-இஸ்திகாஸா ): விமோசனம் அல்லது மீட்பை நாடுதல். அதாவது, துன்பம் மற்றும் அழிவிலிருந்து காப்பாற்றும்படி வேண்டுதல்.

உதவி தேடுதல் (இஸ்திஆனா), பாதுகாப்புத் தேடுதல் (இஸ்திஆதா), இரட்சிப்புத் தேடுதல் (இஸ்திகாஸா) மற்றும் பரிந்துரை பேசுதல் (ஷஃபாஅத்) ஆகியவற்றை ஒரு படைப்பினத்திடம் (மனிதர்களிடம்) அவர்கள் சக்திபெற்ற விஷயங்களில் கோருவது நான்கு நிபந்தனைகளின் அடிப்படையில் கூடும். அந்தப் படைப்பு:

1. உயிருடன் இருக்க வேண்டும் (حيًّا)

2. நேரில் இருக்க வேண்டும் (حاضرًا)

3. ஆற்றல் பெற்றிருக்க வேண்டும் (قادرًا)

4. ஒரு காரணமாக இருக்க வேண்டும் (سببًا)

(6) அறுத்துப் பலியிடுதல் (அத்-தபஹ் ): ஒரு குறிப்பிட்ட முறையில் இரத்தத்தை ஓட்டி, உயிரைப் போக்குவதாகும்.

நேர்ச்சையின் (அந்-நத்ர்) சான்று அல்லாஹ் வின் இந்த வசனமாகும்: ﴿ يُوفُونَ بِالنَّذْرِ وَيَخَافُونَ يَوْمًا كَانَ شَرُّهُ مُسْتَطِيرًا ﴾ "அவர்கள் (தம்) நேர்ச்சைகளை நிறைவேற்றுவார்கள்; மேலும் (மறுமையின்) ஒரு நாளைப் பற்றி அஞ்சுவார்கள், அதன் தீங்கு (எங்கும்) பரவிக் கிடப்பதாகும்."

அறுத்துப் பலியிடுதல் மூன்று வகைப்படும்:

1. அல்லாஹ்விற்காக அறுப்பது: ஹஜ்ஜுடைய பலிப்பிராணி, உழ்ஹிய்யா (குர்பானி) மற்றும் தர்மங்கள் போன்றவை.

2. அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அன்போடும் கண்ணியத்தோடும் அறுப்பது: ஜின்களுக்காகவும், கபுர்வாசர்களுக்காகவும் (இறந்தோருக்காகவும்) அறுப்பது போன்றவையாகும். இது 'ஷிர்க் அக்பர்' (இணைவைப்பில் மிகப்பெரியது) ஆகும்.

3. அனுமதிக்கப்பட்ட (முபாஹ்) முறையில் அறுப்பது: இறைச்சிக்காக ஆட்டை அறுப்பது, விருந்தினரை உபசரிப்பது மற்றும் வியாபாரத்திற்காக அறுப்பது போன்றவை.

குறிப்பு: அறுத்துப் பலியிடுவது பற்றிய கூடுதல் விபரங்கள் இன்ஷா அல்லாஹ் தவ்ஹீத் பாடப்புத்தகத்தில் விரிவாக வரும்.

(1) நேர்ச்சையின் (நத்ர்) வரைவிலக்கணம்:

* மொழி ரீதியாக: வாக்குறுதி அளித்தல் மற்றும் கடமையாக்கிக் கொள்ளுதல்.

* மார்க்க ரீதியாக (ஷரீஅத்): ஒரு முகல்லஃப் (கடமைக்குரிய மனிதர்) தன் மீது கடமையல்லாத ஒரு விஷயத்தை, தானே தன் மீது கடமையாக்கிக் கொள்வதாகும்.

குறிப்பு: நேர்ச்சைக்கான வகைகள், நிபந்தனைகள் மற்றும் அதற்கான பரிகாரங்கள் (கஃப்பாரா) பற்றிய விபரங்கள் இன்ஷா அல்லாஹ் தவ்ஹீத் பாடப்புத்தகத்தில் விரிவாக வரும்.

நேர்ச்சையின் வகைகள்:

* அல்லாஹ்விற்கான நேர்ச்சை

* அல்லாஹ் அல்லாதவர்களுக்கான நேர்ச்சை

ஆசிரியர் இந்த வணக்க வழிபாடுகளைக் குறிப்பிட்டிருப்பது, இவை மட்டும்தான் வணக்கங்கள் என்ற எல்லைக்குள் சுருக்குவதற்காக அல்ல; மாறாக உதாரணத்திற்காகவே ஆகும். ஏனெனில் இன்னும் ஏராளமான வணக்கங்கள் இங்கு குறிப்பிடப்படவில்லை. இதிலிருந்து பெறப்படும் முக்கிய சான்று என்னவென்றால், இந்த வணக்கங்களையோ அல்லது இது அல்லாத பிற வணக்கங்களையோ அல்லாஹ் அல்லாத வேறு எவருக்காகவாவது ஒருவர் அர்ப்பணித்தால், அவர் அல்லாஹ்வுக்கு இணைவைத்துவிட்டார் (ஷிர்க் செய்துவிட்டார்) என்பதாகும்.

Text Lessons

#1

01 மூன்று அடிப்படைகள் (நாம் ஏன் தவ்ஹீதைப் படிக்கிறோம்?)

#2

02 மூன்று அடிப்படைகள் (மூலநூலைப் படிப்பதற்கு முன் பயனுள்ள முன்னுரை)

#3

தவ்ஹீதைப் படிப்பதன் முக்கியத்துவம்

#4

03 மூன்று அடிப்படைகள் (நான்கு விடயங்கள்: அறிவு, அதன்படி செயல்படுதல், அதன்பால் அழைத்தல், அதில் ஏற்படும் துன்பங்களைப் பொறுத்தல்)

#5

04 மூன்று அடிப்படைகளின் விளக்கம் (தவ்ஹீதின் வகைகள்)

#6

05 மூன்று அடிப்படைகள் (மூன்று விடயங்கள்)

#7

06 மூன்று அடிப்படைகள் (உங்கள் இறைவன் யார்?)

#8

07 மூன்று அடிப்படைகள் (துஆ, அறுத்துப் பலியிடுதல், நேர்ச்சை, அச்சம், தவக்குல் ஆகியவற்றின் வகைகள்...)

#9

08 மூன்று அடிப்படைகள் (காரணங்களை நம்புவதில் மக்களின் வகைகள்)

#10

09 மூன்று அடிப்படைகள் (இரண்டாவது அடிப்படை: இஸ்லாம் என்றால் என்ன? மார்க்கத்தின் நிலைகள் எத்தனை?)

#11

10 மூன்று அடிப்படைகள் (இஸ்லாத்தின் தூண்களின் விளக்கம்)

#12

11 மூன்று அடிப்படைகள் (ஈமான் என்றால் என்ன?)

#13

12 மூன்று அடிப்படைகள் (அல்லாஹ்வை எவ்வாறு நம்புவது?)

#14

13 மூன்று அடிப்படைகள் (வானவர்களை எவ்வாறு நம்புவது?)

#15

14 மூன்று அடிப்படைகள் (வேதங்களை எவ்வாறு நம்புவது?)

#16

15 மூன்று அடிப்படைகள் (நபிமார்களையும் தூதர்களையும் எவ்வாறு நம்புவது?)

#17

16 மூன்று அடிப்படைகள் (இறுதி நாளை எவ்வாறு நம்புவது?)

#18

17 மூன்று அடிப்படைகள் (கழா கத்ரை எவ்வாறு நம்புவது?)

#19

18 மூன்று அடிப்படைகள் (இஹ்ஸான்)

#20

19 மூன்று அடிப்படைகள் (மூன்றாவது அடிப்படை)

#21

20 மூன்று அடிப்படைகள் (முடிவுரை)

#22

21 மூன்று அடிப்படைகள் (பொதுவான மீளாய்வு)

View full lessons Check course learning page
Text Lesson 8/22
You are viewing
07 மூன்று அடிப்படைகள் (துஆ, அறுத்துப் பலியிடுதல், நேர்ச்சை, அச்சம், தவக்குல் ஆகியவற்றின் வகைகள்...)