02 மூன்று அடிப்படைகள் (மூலநூலைப் படிப்பதற்கு முன் பயனுள்ள முன்னுரை)
மூன்று அடிப்படைகள் (الأصول الثلاثة) சுருக்கமாக:
அவை கப்ரின் மூன்று கேள்விகளாகும்:
- உன் இறைவன் யார்?
- உன் மார்க்கம் என்ன?
- உன் நபி யார்?
மூன்று அடிப்படைகளைக் கற்றுக்கொள்வதால் நாம் அடையும் பலன் என்னவென்றால்:
நீங்கள் இந்த மூன்று அடிப்படைகளைக் கற்றுக்கொண்டு, அதன்படி செயல்புரிந்து (அமல் செய்து), (மற்றவர்களை) அதன்பால் அழைத்து, கல்வி, அமல் மற்றும் அழைப்புப் பணியில் பொறுமையைக் கடைப்பிடித்தால் — அல்லாஹ்வின் அனுமதியுடன் — கப்ருடைய கேள்விகளுக்கு நீங்கள் சரியான பதிலளிப்பீர்கள்.
இந்த நூல் (மதன்) ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
1. நான்கு விடயங்கள் (மஸாயில் அல்-அர்பாஃ - ஸூரதுல் அஸ்ர்)
2. மூன்று விடயங்கள் (தவ்ஹீதின் வகைகள்)
3. தவ்ஹீதைக் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவம்
4. மூன்று அடிப்படைகள் (கப்ருடைய கேள்விகள்)
5. முடிவுரை
நான்கு விவகாரங்கள்:
- அறிவு (இல்ம்)
- அதன்படி அமல் செய்தல்
- அதன்பால் அழைப்பு விடுத்தல்
- அதில் ஏற்படும் துன்பங்களில் பொறுமை காத்தல்
மூன்று விடயங்கள்:
- தவ்ஹிதுர் ரூபூபிய்யா (படைத்தல், ஆட்சி செய்தல் ஆகியவற்றில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்தல்) மற்றும் அஸ்மா வஸ்-சிஃபாத் (அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் ஆகியவற்றில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்தல்)
- தவ்ஹீத் உலூஹிய்யா (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் மட்டுமே)
- இணைவைத்தல் (ஷிர்க்) மற்றும் இணைவைப்பவர்களிடமிருந்து (உள்ளத்தாலும், நாவாலும், உடல் உறுப்புகளாலும்) விலகியிருத்தல்
தவ்ஹீதைக் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவம்:
"நாம் ஏன் தவ்ஹீதைக் கற்கிறோம்?" என்ற கேள்விக்கான பதில்.
மூன்று அடிப்படைகள்:
மூன்று அடிப்படைகள் சுருக்கமாக கப்ருடைய மூன்று கேள்விகளாகும்.
- உன் இறைவன் யார்?
- உன் மார்க்கம் என்ன?
- உன் நபி யார்?
முடிவுரை:
நூலாசிரியரின் கூற்றான "மக்கள் மரணித்த பின்னர் எழுப்பப்படுவார்கள்..." தொடங்கி நூலின் இறுதி வரை.
இந்த நூலின் சிறப்பம்சங்கள் (மற்றும் ஷேகுல் இஸ்லாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களின் பொதுவான நூல்கள்):
- எளிமையும் தெளிவும்.
- விடயங்களை ஆதாரங்களுடன் குறிப்பிடுதல்.
- சிக்கலான விடயங்களை ஒருங்கிணைத்து, வரிசைப்படுத்தி, எண்ணிக்கையைக் குறிப்பிடுதல், பிறகு அதற்கு விளக்கம் அளித்தல்.
- தன் வாசகர்களுக்கும் கேட்போருக்கும் நூலாசிரியர் அதிகமான பிரார்த்தனைகளை (துஆ)ச் செய்வது.