English flag
English
Select a Language
English flag
English
العربية flag
العربية
Deutsch flag
Deutsch
فارسی flag
فارسی
Français flag
Français
Bahasa Indonesia flag
Bahasa Indonesia
Italiano flag
Italiano
Kurdî / کوردی flag
Kurdî / کوردی
Latviešu flag
Latviešu
नेपाली flag
नेपाली
Русский flag
Русский
தமிழ் flag
தமிழ்
Türkçe flag
Türkçe
Українська flag
Українська
اردو flag
اردو
English icon English
  • English icon English
  • العربية icon العربية
  • Deutsch icon Deutsch
  • فارسی icon فارسی
  • Français icon Français
  • Bahasa Indonesia icon Bahasa Indonesia
  • Italiano icon Italiano
  • Kurdî / کوردی icon Kurdî / کوردی
  • Latviešu icon Latviešu
  • नेपाली icon नेपाली
  • Русский icon Русский
  • தமிழ் icon தமிழ்
  • Türkçe icon Türkçe
  • Українська icon Українська
  • اردو icon اردو
மூன்று அடிப்படைகளையும் அவற்றின் ஆதாரங்களையும் விளக்கும் பாடநெறி: கப்ரில் கேட்கப்படும் மூன்று கேள்விகள்

முடிவுரை:

பகுத்தறிவுள்ள ஒவ்வொருவரும் இந்த மகத்தான மூலநூலைச் சிந்தித்து, அதில் மிகுந்த சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கும் தனது கப்ரில் தேவைப்படும் மகத்தான அடிப்படைகளை அது உள்ளடக்கியுள்ளது.

அல்லாஹ் நன்கு அறிவான். முஹம்மத் மீதும் அவர்களின் குடும்பத்தினர், தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் அருளும் சாந்தியும் உண்டாகட்டும்.

அறிவு என்பது அல்லாஹ்வையும் அவனது நபியையும் ﷺ இஸ்லாமிய மார்க்கத்தையும் ஆதாரங்களுடன் அறிதல்.

(அதாவது மூன்று அடிப்படைகள்

தவ்ஹீதைப் படிப்பதற்கான காரணம்

தனது அறிவின்படி செயல்படாத அறிஞர்            சிலை வணங்குவோருக்கு முன்பே தண்டிக்கப்படுவார்.

அதன்படி செயல்படுதல்: அறிவு செயலை அழைக்கிறது; செயல் பதிலளித்தால் அது நிலைத்திருக்கும்; இல்லையெனில் அறிவு விலகிச் சென்றுவிடும்.

அதன்பால் அழைத்தல்

  • அழைப்பின் நிபந்தனைகள்: மனத்தூய்மை, மார்க்க அறிவு, அழைக்கப்படுபவரின் நிலையை அறிதல், ஞானம் மற்றும் பொறுமை.
  • முதலில் அழைக்கப்படுவது தவ்ஹீத். இதுவே நபிமார்களும் தூதர்களும் செய்த அழைப்பு. அழைப்பின் உயர்ந்த நிலை தவ்ஹீதை எடுத்துரைத்தலும் இணைவைப்பை மறுத்தலுமாகும்

அதில் ஏற்படும் துன்பங்களைப் பொறுத்தல்

  • அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதில் (தொழுகை போன்றது) பொறுமை காத்தல்; பாவத்திலிருந்து (வட்டி போன்றது) விலகிப் பொறுமை காத்தல்; அல்லாஹ்வின் வேதனையான விதிகளில் (வறுமை போன்றது) பொறுமை காத்தல்.
  • அதாவது அறிவிலும், பின்னர் செயலிலும், பின்னர் அழைப்பிலும் பொறுமை காத்தல்.

தவ்ஹீதுல் அஸ்மாஉ வஸ்ஸிபாத் (அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்தல்)

  • தவ்ஹீதுர் ருபூபிய்யா (அல்லாஹ்வின் படைப்பாற்றலில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்தல்)  (ருபூபிய்யாவில் தனித்துவமுடையவன் உலூஹிய்யாவிலும் தனித்துவப்படுத்தப்பட வேண்டும்).

தவ்ஹீதுல் உலூஹிய்யா (அல்லாஹ்வை வணங்குவதில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்தல்) (மனத்தூய்மை). மேலும்: தனது வணக்கத்தில் எவரையும் இணைவைப்பதை அல்லாஹ் பொருந்திக்கொள்ள மாட்டான்; நெருக்கமான வானவராக இருந்தாலும் அனுப்பப்பட்ட நபியாக இருந்தாலும் சரியே.

இணைவைப்பிலிருந்தும் இணைவைப்போரிலிருந்தும் விலகி நிற்றல்: உள்ளத்தால் (நிராகரிப்பாளர்களை வெறுத்தல்); நாவால்:  (إِنَّنِي بَرَاءٌ مِّمَّا تَعْبُدُونَ (26)) (பொருள்: நீங்கள் வணங்குபவற்றிலிருந்து நான் முற்றிலும் விலகியவன்.)  உடல் உறுப்புகளால் (அவர்களின் பண்டிகைகளிலும் கொண்டாட்டங்களிலும் பங்கேற்காமலும் அவர்களைப் போல நடக்காமலும் இருத்தல்).

தவ்ஹீதைப் படிப்பதற்கான காரணம்

(ஹனீஃபிய்யா): இணைவைப்பிலிருந்து விலகி, தூய நோக்கத்தையும் தவ்ஹீதையும் அடிப்படையாகக் கொண்ட மார்க்கம்.

மொழியியல் பொருள்: வஹ்ஹத, யுவஹ்ஹிது, தவ்ஹீதன் என்ற சொல்லின் மூலச்சொல்லாகும் (மஸ்தராகும்). ஒரு பொருளை ஒன்றாக ஆக்கினால் அதை வஹ்ஹத என்று கூறுவர்.

மார்க்க ரீதியான விளக்கம்: ருபூபிய்யா, உலூஹிய்யா, அஸ்மாஉ வஸ்ஸிபாத் ஆகியவற்றில் அல்லாஹ்வுக்கே உரியவற்றில் அவனைத் தனித்துவப்படுத்துதல். அதன் வகைகள் மூன்று:

தவ்ஹீதுர் ருபூபிய்யா: அல்லாஹ்வை அவனுடைய செயல்களில் தனித்துவப்படுத்துதல்; படைத்தல், உரிமை கொண்டிருத்தல், நிர்வகித்தல் ஆகியவற்றில் அவனைத் தனித்துவப்படுத்துதல்.

தவ்ஹிதுல் உலூஹிய்யா: வணக்கத்தில் அல்லது அடியார்களின் செயல்களில் அல்லாஹ்வைத் தனித்துவப்படுத்துதல்.

தவ்ஹிதுல் அஸஸ்மாஉ வஸ்ஸிபாத்: அல்லாஹ் தனது வேதத்தில் அல்லது தனது தூதர் ﷺ வாயிலாகத் தனக்குச் சூட்டிய பெயர்களிலும் வர்ணித்த பண்புகளிலும் அவனைத் தனித்துவப்படுத்துதல். அவன் தனக்கு உறுதிப்படுத்தியவற்றை உறுதிப்படுத்தி, தன்னைப் பற்றி மறுத்தவற்றை மறுத்தல்; பொருளை மாற்றாமலும் மறுக்காமலும், எப்படி என்று வடிவம் கூறாமலும் படைப்புகளுக்கு ஒப்பிடாமலும் இருத்தல்.

இணைவைப்பு என்பது தூய அல்லாஹ்வுடன் சேர்த்து மற்றவரிடமும் பிரார்த்திப்பது. அது பூமியில் மிகப் பெரிய பாவம்.

மூன்று அடிப்படைகள்

தூய, உயர்ந்த அல்லாஹ்வை அறிதல்: உங்கள் இறைவன் யார்? அல்லாஹ்வை எதன் மூலம் அறிந்தீர்கள்? இறைவனே வணக்கத்திற்குரியவன். வணக்கத்தின் வகைகள்; அவற்றில் எதையேனும் அல்லாஹ் அல்லாதவருக்குச் செலுத்துபவரின் சட்டம், ஆதாரத்துடன்.

இஸ்லாமிய மார்க்கத்தை ஆதாரங்களுடன் அறிதல்; இஸ்லாத்தின் வரைவிலக்கணம்; மார்க்கத்தின் நிலைகள்; இஸ்லாத்தின் தூண்கள்; சாட்சியின் வரைவிலக்கணம்; ஈமானின் தூண்கள்; ஈமானின் கிளைகள்; இஹ்ஸான்; மார்க்கத்தின் நிலைகளுக்கான ஆதாரம்; மறுமையின் அடையாளங்கள்.

தனது நபியை ﷺ அறிதல்; அவர்களின் வம்சம், பிறப்பு, வயது, நபித்துவம், தூதுத்துவம், ஊர், அனுப்பப்பட்டதன் நோக்கம், தவ்ஹீதின்பால் அழைத்த காலம், இஸ்ரா மற்றும் மிஃராஜ்; தொழுகை எங்கு, எப்போது கடமையாக்கப்பட்டது? ஹிஜ்ரத், அதன் சட்டம் மற்றும் காலம்; மற்ற சட்டங்கள் எப்போது வகுக்கப்பட்டன? அழைப்பின் காலம், மரணம், கொண்டு வந்த மார்க்கம், ஜின்களுக்கும் மனிதர்களுக்கும் பொதுவாக அனுப்பப்பட்டமை, மார்க்கத்தின் முழுமையும் அருட்கொடையின் நிறைவும்.

முடிவுரை

மரணத்திற்குப் பின் உயிர்த்தெழுதலும் செயல்களுக்குக் கணக்குக் கேட்கப்படுதலும்; உயிர்த்தெழுதலைப் பொய்யெனக் கூறுபவரின் நிராகரிப்பு; தூதர்களின் பணியும் அழைப்பும்; முதல் மற்றும் இறுதித் தூதர்கள்; தவ்ஹீதின் இரு தூண்கள்: தாகூத்தை நிராகரித்தலும் அல்லாஹ்வை நம்புதலும்; தாகூத்தின் வரைவிலக்கணம், தலைவர்கள் மற்றும் அதை நிராகரிக்கும் முறை; லா இலாஹ இல்லல்லாஹ்வின் பொருள்; இஸ்லாம் மார்க்கத்தின் தலைமை; தொழுகை மார்க்கத்தின் தூண்; ஜிஹாத் மார்க்கத்தின் சிகரம்.

உள்ளத்துடன் போராடுதல்

ஸூரத்துல் அஸ்ரில் வந்தவற்றின் மூலம் அமையும் (அறிவு, அதன்படி செயல்படுதல், அதன்பால் அழைத்தல், பொறுமை).

ஷைத்தானுடன் போராடுதல்

ஆசைகள்

பெரும்பாவங்கள் (குறிப்பிட்ட தண்டனை விதிக்கப்பட்ட ஒவ்வொன்றும்)

சந்தேகங்கள்

பெரிய இணைவைப்பு (மார்க்கத்திலிருந்து வெளியேற்றுவது) சிறிய இணைவைப்பு

பித்அத்கள்

நிராகரிப்பாளர்களுடனும் நயவஞ்சகர்களுடனும் போராடுதல்

உள்ளம், நாவு, உடல் உறுப்புகள் மற்றும் செல்வத்தால் அமையும்.

அநியாயம், பித்அத் மற்றும் தீமையைச் செய்வோருடன் போராடுதல்

கை, நாவு மற்றும் உள்ளத்தால் அமையும்.

தாகூத்

வணங்கப்படும் ஒன்று (கற்கள், மரங்கள் போன்றவை), பின்பற்றப்படும் ஒருவர் (தீய அறிஞர்கள் போன்றோர்), அல்லது கீழ்ப்படியப்படும் ஒருவர் (அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதிலிருந்து வெளியேறிய ஆட்சியாளர்கள் போன்றோர்) குறித்து அடியான் தனது வரம்பை மீறுவதாகும்.

தாகூத்கள் பலர் உள்ளனர். அவர்களின் தலைவர்கள் ஐவர்: இப்லீஸ்—அல்லாஹ் அவனைச் சபித்தான் (ஷைகு இங்கு சாபத்தைத் தகவலாகக் கூறுகிறார்); தான் வணங்கப்படுவதில் திருப்தி கொள்பவர்; தன்னை வணங்குமாறு மக்களை அழைப்பவர்; மறைவான அறிவில் எதையாவது அறிவதாகக் கூறுபவர்; அல்லாஹ் இறக்கியதற்கு மாறாகத் தீர்ப்பளிப்பவர்.

அல்லாஹ் நன்கு அறிவான். முஹம்மத் மீதும் அவர்களின் குடும்பத்தினர், தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் அருளும் சாந்தியும் உண்டாகட்டும்.

Text Lessons

#1

01 மூன்று அடிப்படைகள் (நாம் ஏன் தவ்ஹீதைப் படிக்கிறோம்?)

#2

02 மூன்று அடிப்படைகள் (மூலநூலைப் படிப்பதற்கு முன் பயனுள்ள முன்னுரை)

#3

தவ்ஹீதைப் படிப்பதன் முக்கியத்துவம்

#4

03 மூன்று அடிப்படைகள் (நான்கு விடயங்கள்: அறிவு, அதன்படி செயல்படுதல், அதன்பால் அழைத்தல், அதில் ஏற்படும் துன்பங்களைப் பொறுத்தல்)

#5

04 மூன்று அடிப்படைகளின் விளக்கம் (தவ்ஹீதின் வகைகள்)

#6

05 மூன்று அடிப்படைகள் (மூன்று விடயங்கள்)

#7

06 மூன்று அடிப்படைகள் (உங்கள் இறைவன் யார்?)

#8

07 மூன்று அடிப்படைகள் (துஆ, அறுத்துப் பலியிடுதல், நேர்ச்சை, அச்சம், தவக்குல் ஆகியவற்றின் வகைகள்...)

#9

08 மூன்று அடிப்படைகள் (காரணங்களை நம்புவதில் மக்களின் வகைகள்)

#10

09 மூன்று அடிப்படைகள் (இரண்டாவது அடிப்படை: இஸ்லாம் என்றால் என்ன? மார்க்கத்தின் நிலைகள் எத்தனை?)

#11

10 மூன்று அடிப்படைகள் (இஸ்லாத்தின் தூண்களின் விளக்கம்)

#12

11 மூன்று அடிப்படைகள் (ஈமான் என்றால் என்ன?)

#13

12 மூன்று அடிப்படைகள் (அல்லாஹ்வை எவ்வாறு நம்புவது?)

#14

13 மூன்று அடிப்படைகள் (வானவர்களை எவ்வாறு நம்புவது?)

#15

14 மூன்று அடிப்படைகள் (வேதங்களை எவ்வாறு நம்புவது?)

#16

15 மூன்று அடிப்படைகள் (நபிமார்களையும் தூதர்களையும் எவ்வாறு நம்புவது?)

#17

16 மூன்று அடிப்படைகள் (இறுதி நாளை எவ்வாறு நம்புவது?)

#18

17 மூன்று அடிப்படைகள் (கழா கத்ரை எவ்வாறு நம்புவது?)

#19

18 மூன்று அடிப்படைகள் (இஹ்ஸான்)

#20

19 மூன்று அடிப்படைகள் (மூன்றாவது அடிப்படை)

#21

20 மூன்று அடிப்படைகள் (முடிவுரை)

#22

21 மூன்று அடிப்படைகள் (பொதுவான மீளாய்வு)

View full lessons Check course learning page
Text Lesson 22/22
You are viewing
21 மூன்று அடிப்படைகள் (பொதுவான மீளாய்வு)